என் இதயம் இன்பத்தாலே பாடுதே

En Idhayam Inbathale Paaduthe

என் இதயம் இன்பத்தாலே பாடுதே
இயேசு பாலனாக பூவில் வந்ததால்
ஆ ஆ இன்பமே பொங்குதே
அன்புடன் அவர் தந்த பாசமே

வானாதி வானகளின் அரசர்
இவர் வையகத்தில் வந்துதித்த தேவன்
மன்னனவர் மாளிகையை தெரிந்தார்
பசும் புல்லணையில் தானே அவர் பிறந்தார்

வையகமே வானகமாய் மாறுதே
எங்கள் வள்ளல் முகம் மலராக மலருதே
நள்ளிரவில் தேவதூதன் உதித்தார்
புவி நாற்றிசையும் அமுதமாக கேட்குதே

No comments:

Post a Comment