பனிவிழும் ராவினில்

பனிவிழும் ராவினில்,
கடுங்குளிர் வேளையில்,
கன்னிமரி மடியில்
விண்ணவர் வாழ்த்திட,
ஆயர்கள் போற்றிட,
இயேசு பிறந்தாரே

ராஜன் பிறந்தார் (2)
நேசர் பிறந்தாரே (2)

1. மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே,
முன் வழிகாட்டி சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே;
மகிழ்ந்தார், புகழ்ந்தார்,
மண்ணோரின் ரட்சகனை!

2. மகிமையில் தோன்றிய தவமணியே!
மாட்சிமை தேவனின் கண்மணியே!
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே,
மானிடனாக உதிதவரே!
பணிவோம், புகழ்வோம்,
மண்ணோரின் ரட்சகனை!

No comments:

Post a Comment