கன்னி மரியாளின் கீதம்

The Magnificat (The Canticle of Mary)

கர்த்தரை போற்றியே வாழ்த்துது
கனிந்துமே என் ஆத்துமா
களிக்குதே என் ஆவி கருணை
கூர்ந்தனர் பரமாத்துமா

இன்று தன் அடிமையின் தாழ்மையை
இறையவர் கண்ணோக்கினார்
என்றென்றும் எல்லோரும் புகழ
என்னை தன் மயமாக்கினார்

பரிசுத்த நாமம் மகிமையாய்
பகுத்தார் அனைத்தும் நல்லது
பயந்தவர்களுக்கவர் இரக்கம்
பரம்பரைகளுக்குள்ளது

ஆண்டவர் தம் புயத்தை உயர்த்தியே
பராக்கிரமம் செய்திட்டார்
அகந்தையுள்ளோரை சிதறடித்தார்
அன்பர் கருள்மாரி பெய்தார்

ஆசனங்களில் வீற்றிருந்த
பலவான்களை தாழ்த்தினார்
அன்புடன் தாழ்மையானோர்களை
அவருயர்த்தியே வாழ்த்தினார்

பசித்தோரை ஆதரித்தவர்களைப்
பரிந்து நன்மையால் நிரப்பினார்
பஞ்சையாய் தனவான்களையவர்
பாரில் வெறுமையாய் அனுப்பினார்

இனமோடாபிர காமுக்கென்றைக்கும்
இரக்கம் செய்யவே எண்ணினார்
இஸ்ரவேலரை ஆதரித்தவர்
இன்பாய் உய்யவே நண்ணினார்

பிதா குமாரன் சுத்த ஆவிக்கும்
மகிமையுண்டாவதாக
ஆதியிலும் எப்பொழுதும்
மகிமையுண்டாவதாக
ஆ..மென் ஆ..மென்
ஆ..மென் ஆ..மென்

No comments:

Post a Comment