சின்ன இயேசு பாலா கண்ணுறங்காயோ

சின்ன இயேசு பாலா கண்ணுறங்காயோ
விண்ணவரும் மண்ணவரும் தாலாட்டிட
ஆரீராரீராரிரோ

1. மந்தை ஆடு இரவில் காத்து நின்ற மேய்ப்பர்கள்

விந்தையான காட்சி ஒன்றை வானில் கண்டனர்
தேவ தூதர்கள் கூடி பாடி நின்றனர்
இயேசு பிறந்த செய்தி கூறி சென்றனர்

2. வானில் கண்ட நட்சத்திரம் பாதை காட்டிட

ஞானி மூவர் ஒட்டகத்தில் விரைந்து ஏகினர்
பாலகன் இயேசு கண்டு வணங்கி நின்றனர்
காணிக்கை படைத்து பின்னர் திரும்பி சென்றனர்

No comments:

Post a Comment