பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ
மன்னவனின் பிறப்பால்
பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ
விண்ணவனின் வரவால்;

பாவம் இல்லை இனி சாபம் இல்லை
இன்பத்திற்கும் இனி எல்லை இல்லை
இறைவன் பிறந்ததால்

வானங்களும் வந்து வாழ்த்திடுதே
வசந்தத்தின் துவக்க நாள்
கானங்களும் காதில் கேட்டிடுதே
காரிருள் அகன்ற நாள்;
இரவினில் தோன்றும் உதயமே – நம்
இயேசுவும் பிறந்தநாள்
பாதகர் நம்மில் பாவத்தை நீக்க
பாலனாய் வந்த நாள்

No comments:

Post a Comment