சின்னஞ்சிறு சுதனே

சின்னஞ்சிறு சுதனே! என்னருந்தவமே!
மன்னர் மன்னவனே! உன்னதத் திருவே!

காடுண்டு நரிக்கு, குழிகளுமுண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே,
வீடுண்டோ உந்தனுக்கு?

தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க,
காரணம் நீரானீரோ
கோரவெம் பகைகள், பாரச் சுமைகள்
தீர மருந்தானீரோ

No comments:

Post a Comment