Yesu Maanidanaai Pirandhaar
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்
மேய்ப்பர்கள் ராவினிலே – தங்கள்
மந்தையை காத்திருக்க
தூதர்கள் வானத்திலே - தோன்றி
தேவனை துதித்தனரே
ஆலோசனை கர்த்தரே - இவர்
அற்புதமானவரே
விண் சமாதான பிரபு - சர்வ
வல்லவர் பிறந்தனரே
மாட்டுத் தொழுவத்திலே – பரன்
முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம் – அவர்
ஏழ்மையின் பாதையிலே
பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப்
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே - வான
சாஸ்திரிகள் பணிந்தனரே
அன்னாளும் ஆலயத்தில் - அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே - கூறி
தூயனைப் புகழ்ந்தனரே
யாக்கோபில் ஓர் நட்சத்திரம் - இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே - நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார்
Tamil Christmas Carol Songs
Tamil Christian Christmas Carol songs lyrics
என் இதயம் இன்பத்தாலே பாடுதே
En Idhayam Inbathale Paaduthe
என் இதயம் இன்பத்தாலே பாடுதே
இயேசு பாலனாக பூவில் வந்ததால்
ஆ ஆ இன்பமே பொங்குதே
அன்புடன் அவர் தந்த பாசமே
வானாதி வானகளின் அரசர்
இவர் வையகத்தில் வந்துதித்த தேவன்
மன்னனவர் மாளிகையை தெரிந்தார்
பசும் புல்லணையில் தானே அவர் பிறந்தார்
வையகமே வானகமாய் மாறுதே
எங்கள் வள்ளல் முகம் மலராக மலருதே
நள்ளிரவில் தேவதூதன் உதித்தார்
புவி நாற்றிசையும் அமுதமாக கேட்குதே
என் இதயம் இன்பத்தாலே பாடுதே
இயேசு பாலனாக பூவில் வந்ததால்
ஆ ஆ இன்பமே பொங்குதே
அன்புடன் அவர் தந்த பாசமே
வானாதி வானகளின் அரசர்
இவர் வையகத்தில் வந்துதித்த தேவன்
மன்னனவர் மாளிகையை தெரிந்தார்
பசும் புல்லணையில் தானே அவர் பிறந்தார்
வையகமே வானகமாய் மாறுதே
எங்கள் வள்ளல் முகம் மலராக மலருதே
நள்ளிரவில் தேவதூதன் உதித்தார்
புவி நாற்றிசையும் அமுதமாக கேட்குதே
காரிருள் வேளையில் கடுங்குளிர்
Kaarirul Velayil
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே
உன் மாதயவே தயவு
விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவே
விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவால் தயவால்
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே
உன் மாதயவே தயவு
விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவே
விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம்
மனுடரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவால் தயவால்
இவர் யாரோ
Ivar Yaaro
இவர் யாரோ இவர் யாரோ
இப்பாலன் இவர் யாரோ
பெத்லகேம் ஊரில் புல்லணையினில்
பிறந்தவர் இவர் யாரோ
வானவர்கள் ஸ்தோதரித்து பாடுவர் இவர் யாரோ
மானிடர்கள் ஓடி வந்து வணங்கினர் இவர் யாரோ
வானவர் பாடிடவும் ஆயர்கள் வணங்கிடவும்
பாலனாய் வந்துத்த இவர் யாரோ
நட்சத்திரம் தோன்றிடவே பிறந்தவர் இவர் யாரோ
சாஸ்திரிகள் தேடி வந்து வணங்கிட இவர் யாரோ
நட்சத்திரம் தோன்றிடவே சாஸ்திரிகள் வணங்கிடவே
பாரினில் வந்துத்த இவர் யாரோ
யூதர் போற்ற பாலகனாய் பிறந்தவர் இவர் யாரோ
மேலோவீனை காலக்கின இப்பாலன் இவர் யாரோ
யூதனாய் அவதரித்து மேலோனை கலக்கிடவே
பாலனாய் வந்துத்த இவர் யாரோ
இவர் யாரோ இவர் யாரோ
இப்பாலன் இவர் யாரோ
பெத்லகேம் ஊரில் புல்லணையினில்
பிறந்தவர் இவர் யாரோ
வானவர்கள் ஸ்தோதரித்து பாடுவர் இவர் யாரோ
மானிடர்கள் ஓடி வந்து வணங்கினர் இவர் யாரோ
வானவர் பாடிடவும் ஆயர்கள் வணங்கிடவும்
பாலனாய் வந்துத்த இவர் யாரோ
நட்சத்திரம் தோன்றிடவே பிறந்தவர் இவர் யாரோ
சாஸ்திரிகள் தேடி வந்து வணங்கிட இவர் யாரோ
நட்சத்திரம் தோன்றிடவே சாஸ்திரிகள் வணங்கிடவே
பாரினில் வந்துத்த இவர் யாரோ
யூதர் போற்ற பாலகனாய் பிறந்தவர் இவர் யாரோ
மேலோவீனை காலக்கின இப்பாலன் இவர் யாரோ
யூதனாய் அவதரித்து மேலோனை கலக்கிடவே
பாலனாய் வந்துத்த இவர் யாரோ
கன்னி மரியாளின் கீதம்
The Magnificat (The Canticle of Mary)
கர்த்தரை போற்றியே வாழ்த்துது
கனிந்துமே என் ஆத்துமா
களிக்குதே என் ஆவி கருணை
கூர்ந்தனர் பரமாத்துமா
இன்று தன் அடிமையின் தாழ்மையை
இறையவர் கண்ணோக்கினார்
என்றென்றும் எல்லோரும் புகழ
என்னை தன் மயமாக்கினார்
பரிசுத்த நாமம் மகிமையாய்
பகுத்தார் அனைத்தும் நல்லது
பயந்தவர்களுக்கவர் இரக்கம்
பரம்பரைகளுக்குள்ளது
ஆண்டவர் தம் புயத்தை உயர்த்தியே
பராக்கிரமம் செய்திட்டார்
அகந்தையுள்ளோரை சிதறடித்தார்
அன்பர் கருள்மாரி பெய்தார்
ஆசனங்களில் வீற்றிருந்த
பலவான்களை தாழ்த்தினார்
அன்புடன் தாழ்மையானோர்களை
அவருயர்த்தியே வாழ்த்தினார்
பசித்தோரை ஆதரித்தவர்களைப்
பரிந்து நன்மையால் நிரப்பினார்
பஞ்சையாய் தனவான்களையவர்
பாரில் வெறுமையாய் அனுப்பினார்
இனமோடாபிர காமுக்கென்றைக்கும்
இரக்கம் செய்யவே எண்ணினார்
இஸ்ரவேலரை ஆதரித்தவர்
இன்பாய் உய்யவே நண்ணினார்
பிதா குமாரன் சுத்த ஆவிக்கும்
மகிமையுண்டாவதாக
ஆதியிலும் எப்பொழுதும்
மகிமையுண்டாவதாக
ஆ..மென் ஆ..மென்
ஆ..மென் ஆ..மென்
கர்த்தரை போற்றியே வாழ்த்துது
கனிந்துமே என் ஆத்துமா
களிக்குதே என் ஆவி கருணை
கூர்ந்தனர் பரமாத்துமா
இன்று தன் அடிமையின் தாழ்மையை
இறையவர் கண்ணோக்கினார்
என்றென்றும் எல்லோரும் புகழ
என்னை தன் மயமாக்கினார்
பரிசுத்த நாமம் மகிமையாய்
பகுத்தார் அனைத்தும் நல்லது
பயந்தவர்களுக்கவர் இரக்கம்
பரம்பரைகளுக்குள்ளது
ஆண்டவர் தம் புயத்தை உயர்த்தியே
பராக்கிரமம் செய்திட்டார்
அகந்தையுள்ளோரை சிதறடித்தார்
அன்பர் கருள்மாரி பெய்தார்
ஆசனங்களில் வீற்றிருந்த
பலவான்களை தாழ்த்தினார்
அன்புடன் தாழ்மையானோர்களை
அவருயர்த்தியே வாழ்த்தினார்
பசித்தோரை ஆதரித்தவர்களைப்
பரிந்து நன்மையால் நிரப்பினார்
பஞ்சையாய் தனவான்களையவர்
பாரில் வெறுமையாய் அனுப்பினார்
இனமோடாபிர காமுக்கென்றைக்கும்
இரக்கம் செய்யவே எண்ணினார்
இஸ்ரவேலரை ஆதரித்தவர்
இன்பாய் உய்யவே நண்ணினார்
பிதா குமாரன் சுத்த ஆவிக்கும்
மகிமையுண்டாவதாக
ஆதியிலும் எப்பொழுதும்
மகிமையுண்டாவதாக
ஆ..மென் ஆ..மென்
ஆ..மென் ஆ..மென்
விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்
1. விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்
அதை எண்ணி வியப்பு மிக கொண்டேன்
அதன் காரணம் என்னவென்று கேட்டேன்
தேவன் மானிடன் ஆனார் என்றறிந்தேன் - naan
ஆ…ஆ…ஆ…
அந்த பாலன் இயேசு ராஜன்
அவர் பாதம் பணிவோம் (2)
2. மந்தை காக்கும் மேய்ப்பர் சிலர் கண்டேன்
அவர் விந்தையான செய்தி சொல்ல கேட்டேன்
தேவ தூதர்கள் கூடி பாடிய பாடலையும்
இயேசுவை கண்டதையும் கேட்டேன்
3. ஒட்டகத்தில் மூவர் செல்ல கேட்டேன்
அதை திட்டமாய் அறிய அங்கு சென்றேன்
இயேசுவை தரிசித்த ஞானிகள் மூவர் தங்கள்
தேசம் திரும்புவதை கண்டேன்
அதை எண்ணி வியப்பு மிக கொண்டேன்
அதன் காரணம் என்னவென்று கேட்டேன்
தேவன் மானிடன் ஆனார் என்றறிந்தேன் - naan
ஆ…ஆ…ஆ…
அந்த பாலன் இயேசு ராஜன்
அவர் பாதம் பணிவோம் (2)
2. மந்தை காக்கும் மேய்ப்பர் சிலர் கண்டேன்
அவர் விந்தையான செய்தி சொல்ல கேட்டேன்
தேவ தூதர்கள் கூடி பாடிய பாடலையும்
இயேசுவை கண்டதையும் கேட்டேன்
3. ஒட்டகத்தில் மூவர் செல்ல கேட்டேன்
அதை திட்டமாய் அறிய அங்கு சென்றேன்
இயேசுவை தரிசித்த ஞானிகள் மூவர் தங்கள்
தேசம் திரும்புவதை கண்டேன்
இயேசு ராஜா ஓடி வந்தாராம்
இயேசு ராஜா ஓடி வந்தாராம்
பாவிகள தேடி வந்தாராம்
நாட்டுபுற ஊருல மாட்டுத் தொழுவ வீட்டுல
பாலகனா பொறந்துபுட்டாராம் - ஆஹா
நாட்டுபுற ஊருல மாட்டுத் தொழுவ வீட்டுல
நாட்டுபுற ஊருல மாட்டுத் தொழுவ வீட்டுல
பாலகனா பொறந்துபுட்டாராம்
ஊருலேதான் யாரும் இல்லேங்க
நம்ம ஊரு பக்கம் ஆடு மாடுங்க
துன்பத்துல பருங்க
இயேசுநாதர் பேருங்க
அருள வாரி வழங்குவாருங்க - ஐயா
இம்மையிலே கஷ்டம் உண்டுங்க
அத நெனச்சி நெனச்சி கவல வேண்டாங்க
உள்ளதயே உள்ளபடி அவர்கிட்ட சொல்லிடுங்க
ஆயுசுக்கும் அமைதிதானுங்க - ஐயா
Subscribe to:
Posts (Atom)